14 மே 2017

அன்னையர் தின வாழ்த்தென்பது...!

முந்தா நாள் குடித்த 
டீக்கப்பும், 
நேற்று சாப்பிட்ட எச்சில் தட்டும் 
மூலையெங்கும் சிதறிக்கிடக்கும்
அழுக்கு ஆடைகளும், 
துவைத்து மடித்ததை 
எடுத்தடுக்க உதவாத 
உள்ளங்களுமாய்

விண் தொட்டாலும் 
மண்ணுக்குள் மனம் புதைத்து

ஒற்றை ரோஜாவும், 
ஒரு நாள்” நினைவும்
ஒரிரு வார்த்தைகளும்
போதுமென 
நினைப்போரின் 
அன்னையென்பதை விட 
அனாதையாய் இருத்தல் சிறப்பே.

அன்னையின் மனதை கொன்று 
அவள் சமாதி மேல் வைத்த 
மலர் வளையங்களாய்

அன்னையர் தினத்தின வாழ்த்து!

18 கருத்துகள்:

  1. கொஞ்சம் நெருடலாய் இருந்தாலும்
    பலர் விஷய்த்தில் இதுதான்
    உண்மையாய் இருக்கிறது

    சிறப்புக் கவிதை அருமை

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  2. அருமை உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. பல இடங்களில் அப்படித்தான்பா ..தாத்தா பாட்டி காலத்து வாழ்க்கையை இப்போ எதிர்பார்க்க முடியாது அப்போ இல்லாததெல்லாம் இப்போ இருக்கு எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட நாம் இதையும் ஏற்றுக்கொள்வோம் ..எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்வோம் ..இனிய அன்னையர்தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலோனோரின் செயல்கள கண்டு வந்த வரிகளே இவை. பலர் எழுத்தில் அன்னையை போற்றி எழுதி விட்டு செயலில் தூற்றுவதை காணும் போது மனசுக்கு கஷ்டமாகத்தானே இருக்கும்.

      நீக்கு
  4. மனதை சுட்ட அன்னையர் தின பதிவு..... அன்னையாகிய என் தோழி நிஷாவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். சுடும் பதிவு தான். நன்றிப்பா

      நீக்கு
  5. சகோ நிஷா/அன்பார்ந்த நிஷா தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்!

    கீதா: உங்கள் வரிகளை ரசித்தேன்.இதுதான் இப்போதைய சூழல். வாழ்த்துகள் என்று ஒரு தினம் இப்படிச் சொல்லுவது தேவையோ என்று கூட கில்லர்ஜியின் பதிவில் சொல்லியிருந்தேன். தாயுமானவராய் வாழும் ஆண்களுக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் இந்த தினம் அந்த தினம் என்று வந்தாலே நான் கண்டுப்பதில்லைப்பா. ஆனால் இந்த அன்னையர் தினம் மட்டும் ஏனோ அப்படி விட முடிவதில்லை.

      நீக்கு
  6. அன்னையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. பலர் இப்படித்தான். ஒரு நாள் மட்டும் வாழ்த்து... மற்ற நாட்களில்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற நாட்களில் திட்டும் குட்டும் தான். பலரின் நிஜமுகங்கள் இப்படித்தான்

      நீக்கு
  8. எனக்கும் இந்த ஒருநாள் வாழ்த்தில் விருப்பம் இல்லை...


    கவிதையின் வரிகள் மனதை மிகவும் வலிக்க செய்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அனுராதா. பல அன்னையரை நினைத்தால் பாவமாக இருக்கும்.

      நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!