13 நவம்பர் 2015

முயலாமை வெல்லாது!

முயன்றால் முடியாதது என்றொன்றில்லையென்று 
என்றோ ஒருவர் சொல்லிச்சென்றான். 
சென்றவன் வென்றான்..

வென்றவன் எம் மனதையும் வென்று  

இயலாமையெனும் இருளை கொன்றான். 
கொன்றபின் நிமிர்ந்து நின்றான்.

தூரத்தில் வருவதை துணிவுடன் எதிர்கொண்டால் 

துயரங்கள் கடந்திடும் துன்பங்கள் நீங்கிடும்
துணிந்த பின் மனமே உனக்கென்னெ துயருண்டு!

இல்லாமை சொல்லாமை  தள்ளாமை கல்லாமை 

வல்லமை  தனைக்கொண்டு  விண்ணையும் 
தொடலாமே.. உணர்ந்தபின் உனக்கென தடையிங்கே?

கையில்லை. காலில்லை  காசில்லை 

துணையில்லை என சொல்லி 
துணிவையே இழந்திடுவோரை நீர் கேளீரோ!

6 கருத்துகள்:

  1. //தூரத்தில் வருவதை துணிவுடன் எதிர்கொண்டால்
    துயரங்கள் கடந்திடும் துன்பங்கள் நீங்கிடும்
    துணிந்த பின் மனமே உனக்கென்னெ துயருண்டு!//

    அருமையான கவிதை அக்கா

    பதிலளிநீக்கு
  2. ஆழமாகச் சிந்தித்து
    அருமையாகப் படைக்கின்றீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நன்றிங்க தொடரும் ஆதரவுக்கும் நன்றி.

      நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!