15 ஜனவரி 2024

நன்றல்லது அன்றே மறப்பது நன்று


உதவி செய்தவையளையும்
கஷ்டப்படும் போது
கரம் பிடித்து
தூக்கி விட்டவங்களையும்
கலங்கி நின்ற நேரம்
ஆறுதல் செய்தவர்களையும்
ஏற்றிய கைகளையும்
எட்டி உதைப்போம்
எள்ளி நகையாடுவோம்

ஒதுங்கி போனாலும்
ஓரமாய் சென்றாலும்
விளக்கேற்றியவர்கள்
வாசல்களில்
விளக்குகள் அணைந்து
இருள்கள் பிடிக்கும் வரை
பாசம் எனும் வேலி போட்டு
வேடிக்கை பார்க்கும்
வேங்கைகள் நாங்கள்
நீ என்ன செய்து விட்டாய்?
கோடி கோடியாய் தந்தாயோ?
பிச்சை காரி நீ
உனக்கென்ன தலைக்கனம்
மூலையில் முடங்கி கிட
தேளாய் கொட்டிடுவோம்
அத்தனைக்கும் முத்தாய்
பல்கலை செல்லாமலே
பிழைக்க தெரியாதவன்
பட்டமும் நாம் தருவோம்

தன்னுருதி சிந்தி
கடமை உடமை என்று
தனக்கென சுயநலமாய்
வாழத்தெரியாத முட்டாள்கள்
இருக்கும் வரை
நன்றி மறந்த மனிதர்கள்
நல்லாத்தான் இருப்பார்கள்..!
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”

2 கருத்துகள்:

  1. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும், தங்களது தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லா நாளும் இனிதாக அமைந்திடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமான நன்றியும் இனிய நல் வாழ்த்துகளும் வெங்கட் சார்.

      நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!