இளையோர் எதிர்காலத்தை நாசமாக்கி, நரகத்தில் உழன்று நாறிப்போக
தூண்டி விடுவோருக்கு கடும் கண்டனங்கள் 🔥🔥🔥🔥
எடுத்தேன் கவிழ்த்தேன் என்றால் பல்கலைக்கழகத்தை முடக்கு...!
உன் கல்வியை பகிஸ்கரி ....!
இழுத்து மூடிவிட்டு யாரை எதிர்த்து யாருக்கான தீர்வை, யாரிடம் கேட்டு பெறுவீர்கள்?
நீங்கள் உங்கள் கல்வியை முடக்குவதனால் யாருக்கு நஷ்டம்?
இதற்கா இத்தனை பாடுபட்டாய் ஈழத்தமிழா?
எமது மாணவர் சமூகத்தைபோராடடத்தினுள் நுழைத்து
எம்அறிவையும் ஆற்றலையும் முடக்குவது தான் இலக்கென்றால்...?
உணர்வுகளை தொலைத்து,உயிர்களை அழித்து,உடைமையும் இழந்து,உறவுகள் உலகெல்லாம் பிரிந்து,அனாதையாக, சொந்தபந்தம் சோகமாக ஆளுக்கொரு திசையில் பிரிந்து அகதியென நாடின்றி அலைந்திருக்கவே வேண்டாம்.
அடிமடட கூலிவேலைகளும், உணவு விடுதிகளிலும் சமையலறைகளிலும்
சுத்தப்படுத்தும், பாத்திரம் கழுவும் பணிக்கு பணியிலும் வெயிலிலும் இரவு பகல் ஓய்வின்றி உழைத்து நாற்பதுக்கு முன் மாரடைப்பும், சக்கரை நோயும் உடன் இலவச இணைப்பாக மனஅழுத்தமும் பரிசளிக்கும் புலம்பெயர் வாழ்க்கை தரும் வலிகளை எங்கள் பிள்ளைகளும் உணர வேண்டாம்.
எமது பிள்ளைகள் குறித்தும் அவர்கள் எதிர்காலம் குறித்தும் பெற்றோராய், சமூகவியலாளராய் அக்கறை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும்எமது எதிர்கால சமூகத்தை சீராக கட்டமைக்க வேண்டுமானால் அவரவர் தனிப்படட கடமையை உணர வேண்டும்.
கல்விக்குள் அரசியலை நுழைத்து, எமக்கான தீர்வுகளை துரமாக்கிய கடந்த கால தவறுகள் தொடர்ந்து கொண்டிருப்பதுடன்
எமது இளையோரின் கல்வியையும் சிதைத்து சிதிலப்படுத்த திடடமிடுவோரையும், ஆதரிப்போரையும் இனம் கண்டு ஒதுக்க வேண்டியது அவசியமாகின்றது.
எங்கள் இளம் சமூகத்தினை தவறாக வழி நடத்தவும், சீரழிப்புக்கு துணை செய்தும்,இளையோர் அறியாமல் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த முயற்சிக்காமல் தன்னை யோக்கியனாக காட்டிக்கொண்டுஉத்தமர் வேடம் போடும் அதிகாரிகளும்,அரசியல்வாதிகளும்,ஆசிரியர்களும் இவர்களுக்கு ஜால்ரா தட்டும் அணைத்து புண்ணியவான்களும் மல்லாக்க படுத்து கொண்டே தன் மேல் தானே துப்பும் எச்சில் அவர்களையும் நாறடிக்கும் எனும் உண்மையையும் புரிந்திடவேண்டும்
எங்கள் நம்பிக்கை கல்வியில் தான்.
பாகுபாடற்ற கற்றலுக்காக தான் அத்தனையும் இழந்தோம். கல்வி தான் எமது சமூகத்தின் மாபெரும் மூலதனம். எமக்கான கல்வி எங்கள் உயிர் மூச்சாக இருக்கின்றது.
எமது அஸ்திபாரம் அசைக்கப்படுகின்றது..!
குற்றம் சாடடப்படுவதும்,பாதிப்புக்குள்ளாவதும் எமது இளம் சமூகமே என்பதை மிகவும் கவனமாக அணுகுவதுடன் இதுவும் இனஅழிப்பின் ஒரு வகை யுக்தி என்பதை புரிந்து ( வேரோடு கருவறுத்தல் என்பர்) உயர்தரம் கற்கும், பலகைலைக்கழகம் செல்லும் மாணவர் சமூகம் குறித்து தொடர்ந்து வெளிவரும் செய்திகள்,பயமுறத்தல்கள், பின்னடைவுகள் குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான்,நீ,அவன் என எமது குற்றச்சாட்டுக்களை, விமர்சனங்களை, சாபங்களை முன் வைக்கும் முன்னர் எமது சொந்த விரலை கொண்டே எமது கண்களை குத்தி குருடாக்க நினைக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை இனம் கண்டு கொள்ளவும் வேண்டும்.
எமது இளம் சமூகத்தினை உளவியல் ரீதியாகவும், கல்வி, பொருளாதார தாக்கங்களினுடாகவும் அடிவேரில் கரையான் புற்றை உருவாக்கி எஞ்சி இருக்கும் நம்பிக்கைகளை சிதைத்திட எடுக்கும் முயற்சிகளை தடுக்கும் தீர்வுத்திட்டங்கள், கருத்தாய்வுகளை முன்னெடுக்காமல் வடகிழக்கு கல்வி மேம்பாடு குறித்த திட்டங்களை தொடர்வதனால் எமது முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகவே போகும்.
இனியேனும் சுதாகரிப்போம்