08 செப்டம்பர் 2019

நூலகம் அமைக்கும் பணிக்கான உதவிக்கோரிக்கை.

எமது எதிர்கால சமூகத்தினை கட்டமைத்திடும் நீண்ட கால திட்டமிடலோடு....!
கடந்த வருடம்  நான் இட்ட பதிவில்  நூல்களை தந்து உதவுவதாக கூறிய  நட்புக்களே... !
கலாச்சாரம், சமூகச் சீர் திருத்தம், சமூக மேம்பாட்டுக்கான கருத்தியல்களை பயிற்றுவித்து உடன் பயணித்திட...!
அடுத்த புத்தாண்டிலிருந்து சமூக முன்னேற்றத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுடனும் ஊர்ப்பெரியவர்களின் ஒத்துழைப்போடு,மாதிரி மீட்சித்திட்டமொன்றை முன்னெடுக்கும் பணியில்....
நூலகத்துக்கு தேவையான நூல்களை அடுத்து வரும் இரு மாதங்களுக்குள் சேகரித்து தரக்கூடிய ஆர்வமுள்ளவர்கள் இணையுங்கள்.
கட்டாயம் தேவையான நூல்கள்
1.சிறுவர் இலக்கியங்கள்.
2. பாலர், சிறுவர் பாடல்கள் / தமிழ் ஆங்கிலம் சிங்களம்
3. பாலர், சிறுவர் கதைகள் / தமிழ் ஆங்கிலம் சிங்களம்
4.சரித்திர,வரலாற்று நூல்கள்
5.பாடசம்பந்தமான புத்தகங்கள்.
6.நாவல்கள்
7.சங்ககால இலக்கியங்கள்
8. விஞ்ஞான, சமூகவியல் நூல்கள்,
9.தொழில் நுட்பம் சார்ந்த நூல்கள்
10. சுய சரிதைகள் கவிதைகள் கட்டுரைகள் அனைத்தையும் கொண்ட நூலகம் அமைத்திடும் பணியில் இணையுங்கள் நண்பர்களே..!

எம்மால் முன்னெடுக்கபட இருக்கும் திட்டங்கள் 
01. Kinder Garden
02. Library,
03. Free Classes,
04 Free Exam Practice,
05. Motivation & Counseling Classes
06. Sports Activities
07. Youth Development Programs
08. Cultural Activities
09. Study & Reading Corner, Etc

தமிழ் நாட்டிலிருந்து நூல்களை சேகரித்து தர கூடியவர்கள். விபரம் தந்தாலும் நான் அனைத்தையும் ஒருங்கிணைத்து இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்வேன்.
தேவைகள் அனேகமுண்டெனினும் நூல்களுக்காக மட்டுமே இங்கே கோரிக்கை விட்டிருக்கின்றேன்.
திட்டமிட்ட காரியங்கள் பூர்த்தியான பின் இடம், காலம் அனைத்தும் பகிரப்படும்.

அது வரை... !
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

என்றுணர்ந்தே கரம் இணையுங்கள்...!


சந்திரயான்-2

சந்திரயான்-2
தகவல் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் தரையிறங்கி இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் - 2 இன் சுற்றுக்கலன் ( ஆர்பிட்டர் ) தெர்மல் இமேஜிங் மூலம் விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ ( Indian Space Research Organisation ) அறிவித்திருக்கின்றார்கள்.
சந்திரயான் -2 Orbiter (சுற்றுக்கலன்) - ஒரு வருட ஆய்வுக்காலப் பயண சுற்றுப்பாதை.
சந்திரனின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் ( hard-landing ) தரையிறங்கி இருப்பதாகவும் அதனை தொடர்பு கொள்ள முயற்சித்து கொண்டிருப்பதாகவும் இஸ்ரோ தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள்.
எனினும் சந்திரயான் 2 இன் சுற்றுக்கலன் ( ஆர்பிட்டர் ) சுற்றுப் பாதையிலும், நிலவின் மேற்பரப்பிலும் நிலவைக்குறித்த தன் ஆய்வை அடுத்து ஒருவருடம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

 சந்திராயன் 2 இல் விக்ரம்  ரோவர் மற்றும் பிராக்யானின் இயக்கம் குறித்து  இஸ்ரோ வெளியிட்டிருந்த  பிரசன்ரேசன் இந்த லிங்கில் காண முடியும்/
https://www.isro.gov.in/sites/default/files/videos/ch2-eng-mp4-8mbps.mp4.mp4?fbclid=IwAR3u5D6C6nqB9QvgBEJmOi9wBB20h8KDoXqq8ktXv0zX9iqI69PNlzF8gsg


சந்திராயன் - 2
இந்திய விண்வெளியினால் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா விண்கலம் சந்திரயான்-1 2008 ஆம் ஆண்டில் அனுப்பட்டது. இரண்டாவது தடவையாக நிலவினுள் நுழைந்து ஆய்வு செய்யும் திட்டத்தோடு 22.07.2019 இல் சந்திரயான் - 2 விண்கலம் ஏவப்பட்டது.
சந்திராயன் - 2 இன்

ஒட்டு மொத்த இயக்கத்தை காட்டும் அசை படம்

சந்திரயான் -2 இன் நோக்கங்கள்
நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கும் திறனை நிரூபிப்பது(soft-land) ரோபோ ரோவரை இயக்குவது. அதனூடாக நிலவினுள் நுழைந்து ஆய்வுகள் மேற்கொள்வது.

சந்திராயன் 2
Orbiter (சுற்றுக்கலன்) - ஆய்வுக்காலம் ஒரு வருடம் 
   Vikram lander எனும் தரையிறக்கி Pragyan rover எனும் உலாவியையும் இணைத்து உருவாக்கப்பட்ட விண்கலம்.

Vikramlander-(தரையிறக்கி) ஆய்வுக்காலம்  14நாட்கள்

 ➤(Pragyan rover நிலவின் மென்மையாக தரையிறக்கும் பணிக்கான செயல்பாட்டு க்கு திட்டமிடப்பட்ட சாதனம்.கமெரா மற்றும் உயர் தெளிவுத்திறன் வாய்ந்த தொழில் நுட்ப சாதனங்களுடன் பொருத்தப்பட்டது)ஆர்பிட்டருடன்

பயணித்துஅதன் சுற்றுப்பாதையிலிருந்து பிரிந்து Pragyan rover ஐ நிலவில் மேற்பரப்பில soft landing / ஷாப்ட் லாண்டிங்க செய்வது Vikram landerக்கான முக்கியமான பணி.
Pragyan rover (சில்லுகளுடனான உலாவி)
  Vikram lander இலிருந்து பிரியும் பிராக்யான் ரோவர் 6 சக்கரங்களுடன் சந்திர மேற்பரப்பில் வினாடிக்கு 1 செ.மீ என்ற விகிதத்தில் நகர்ந்து, ஆன்-சைட் வேதியியல் பகுப்பாய்வு செய்து கிடைக்கும் தகவல்களை லேண்டருக்கு அனுப்பும், விக்ரம் லேண்டர் அதை பூமியில் உள்ள மிஷன் கன்ட்ரோலுக்கு அனுப்பும்.
Vikram lander சந்திரனில் தரையிறங்கும் செயல்பாடு.

இலக்குகள்
விக்ரம் லேண்டரும்.பிராக்யான் ரோவரும் சந்திரனுக்கு அருகில், தென் துருவப் பகுதியில் சுமார் 70 ° தெற்கே அட்சரேகையில் ஏறக்குறைய 7 செப்டம்பர் 2019 அன்று அதிகாலை 1:50 மணிக்கு தரையிறங்கும். பிராக்யான் நிலாவினுள் ஊர்ந்து மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளும். ப்ரக்யான் திரட்டும் தகவல்கள் விகரம் மற்றும் சுற்றுக்கலனூடாக பூமிக்கு அனுப்பப்படும்.
சுற்றுக்கலன் - Orbiterஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும்.

⧪ 22.07.2019 நிலவை நோக்கி ஏவப்பட்டது சந்திராயன் 2 எனும் பெயரிடப்பட்ட Orbiter.
⧪ 20.08 2019 இல் சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்து பிரிந்து செல்ல வேண்டிய தரையிறக்கியான விக்ரம் லேண்டரின் தரையிறக்கத்திற்கான சுற்றுப்பாதை பொருத்தும் பணிஆய்வுகளை மேற்கொண்டது.
⧪ 02. 09.2019 விக்ரம் லேண்டர் அதன் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்து பிராக்யானுடன் நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது.
⧪ 07.09.2019 அதிகாலை 1.50 க்கு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க வேண்டும். எனினும் அதிகாலை 1:52 மணியளவில், தரையிறக்கியான விக்ரம் லேண்டர் அதன் பாதையிலிருந்து விலகி சுமார் 2.1 கிலோமீட்டர் (1.3 மைல்) தொலைவில் தகவல்தொடர்பை இழந்தது.
தற்பொழுது நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர், தெர்மல் இமேஜிங் மூலம் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்திருக்கின்றது.

படங்கள் அனைத்தும்  இஸ்ரோ  விக்கிமீடியா தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.