என் உணர்வும்,உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்குமா? எனும் பதிவில் பிரச்சனை நேரம் நம்மை விட்டு செல்லும் நட்பூக்கள்,உறவுகள் குறித்த என் புரிதலை எழுதி இருந்தேன்!
அதில் கர்ணனை உதாரணமாக்கி கீழே இருக்கும் வாக்கியத்தை இட்டிருந்தேன்!
மகாபாரதப்போரில் துரியோதனன் செய்தது தவறென தெரிந்தும், தன் உயிரே போகும் என அறிந்தும் தன் தாயின் வேண்டுதலை மீறியும், நட்புக்கு ஆபத்து எனும் போது தன் சகோதர்களை எதிர்த்து உயிர் துறந்தானாம்!
இக்காலத்தில் கர்ணனைப்போல் செஞ்சோற்றுக்கடனுக்காக உயிர் துறக்க கூட வேண்டாம்,நான்கு வார்த்தை ஆறுதலாய் பேசலாமே?
மகாபாரதத்தில் அப்படி எந்த சம்பவமும் நடந்ததாய் இல்லையே என்பது போல் ஒரு மெயில் தரும் தகவல்!
மகாபாரதப்போரில் கர்ணனை குறித்த என் புரிதல் சரியா? தவறா?
மகாபாரதம் நூலை நீண்ட காலம் முன்னால் நான் படித்திருக்கின்றேன். பாண்டவர்களுக்கும் , கௌரவர்களுக்கும் போர் தொடங்கிட முன்னர் கண்ணன் மூலம் கர்ணன் யார் என அறிந்த குந்தி தேவியார் கர்ணனை பாண்டவர் பக்கம் சேரும் படி கேட்பதும் கூட படித்த நினைவே!
துரியோதனனின் பல காரியங்களை கர்ணன் விரும்பாதிருந்தும் தவறென சுட்டிக்கட்டியும் இருப்பதாய் தான் படித்தேன்.
துகளக் வாரமலரில் தொடராக கூட படித்த நினைவு.
விக்கிமீடியாவில் என் கருத்தை சரியா என ஆராய்ந்தேன் !
மேலே இட்ட என் கருத்துக்கான விளக்கம் வீக்கிமீடியாவில் இருந்தே>>>>>>>
துரியோதனன் செய்வது தவறென தெரிந்தும் விளக்கம்
கர்ணன் துரியோதனனுக்கு விசுவாசமுள்ள மற்றும் உண்மையான நண்பனாகப் பேசப்படுகின்றார். பிரபலமற்ற சூதாட்ட விளையாட்டிற்கு துரியோதனன் மனமகிழ்கையில், அவர் அதைத் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். கர்ணன் ஷகுனியை விரும்பவில்லை, மேலும் தொடர்ந்து துரியோதனனுக்கு அவரது எதிரிகளை வீழ்த்த வஞ்சகம் மற்றும் சூழ்ச்சியைப் பயன்படுத்துவதற்குப் பதில் போர்வீரம் மற்றும் திறனைப் பயன்படுத்துமாறு அறிவுரைத்தார். அரக்கு மாளிகையில் பாண்டவர்களைக் கொல்லும் முயற்சியில் தோல்வி ஏற்பட்ட போது, கர்ணன் துரியோதனை அவரது மனத்தளர்விற்காகக் கடிந்துகொள்கின்றார். கோழைத்தனத்தின் வழிகள் தோல்வியில்தான் முடியும் என்று கூறி, வீரத்தின் மூலம் வேண்டியதைப் பெறலாம் எனவே போராளியாக மாற அவரை வற்புறுத்துகின்றார்.
குந்தியை தன் தாயென அறிந்தும் அவர் வேண்டுதலை மீறினார் என நான் சொன்னதன் காரணம்
குந்தி கர்ணனை பாண்டவர்களுடன் சேர்ந்து அரசனாகும் படி கூறினார். கர்ணன் அதை மறுத்து குந்தியிடம், அவர் தன்னை பல வருடங்களுக்கு முன்னர் கௌந்தேயன் என்று அழைக்கத் தயாராக இருந்தாரா என்று கேட்டார். மேலும் அவர் களத்தில் தோன்றியவுடன் காட்சியும் கோலமும் மாறியிருக்கின்றன என்றும் கூறினார். ஆனால் இப்போது அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது காலதாமதமானது ஆகும். மேலும் அவர் துரியோதனின் நண்பனாகவே இருக்க விரும்புவதாகவும், அவர் அவரது நட்புக்கு துரோகம் இழைக்க முடியாது என்பதையும் கூறினார்.
மகாபாரதப்போரில் பாண்டவர்களுக்கு எதிராய் தானே போரிட்டான், துரியோதனன் அதாவது கௌரவர் பக்கம் நின்று துரியோதனன் பக்கம் போரிட்டார் எனும் போது தன் சகோதரர்களுக்கு எதிராய் அவர்கள் தன் சகோதரர்கள் என தெரிந்தும் நட்புக்கும் செஞ்சோற்றுக்கடனுக்குமாய் அவன் தன்னை அர்ப்பணித்தான் தானே?
கர்ணன் அந்த சிறந்த வாய்ப்பை மறுக்கின்றார், ஏனெனில் அவர் கடந்தகாலத்தில் துரியோதனன் மீதான வைத்திருந்த விசுவாசம் மேலும், அதே போன்று மரபு வழியில் பாண்டவர்களுடன் பிணைப்பு இருந்தாலும் அவர் துரியோதனின் பக்கம் இருக்க நிர்பந்திக்கப்பட்டிருந்தார்.
துரியோதனனுக்கு தனது நன்றிக்கடனை செலுத்த, கர்ணன் இந்திரப்பிரஸ்தாவின் மகுடத்தை துரியோதனனுக்கு அளிக்கலாம். இந்த கர்ணனின் எண்ணம் தர்மத்துக்கு எதிராக இருந்தது. அவர் மேலும் கிருஷ்ணரிடம், நீண்ட காலமாக பாண்டவர்களுடன் உண்மையின் பக்கம் இருக்கிறீர்கள், தோல்வி என்பது அவருக்கு நிச்சயம் என்பதை நினைவூட்டினார். கிருஷ்ணர் வருத்தமடைந்தார், ஆனால் கர்ணனின் விசுவாசத்தைப் பாராட்டினார், அவரது முடிவை ஏற்றுக்கொண்டார்!
விக்கிமீடியாவில் இருக்கும் கர்ணன் (மகாபாரதம்) தகவல்கள் சரியா? தவறா?