10 மார்ச் 2016

மகளிர் தினத்தில் மகளிராய்...........!

நேற்றைய மகளிர் தின வாழ்த்துகள் கண்டதும் பெண்களில் இன்றைய நிலை ஒரு நாள் வாழ்த்துடன் முடிந்து விடுமா என நினைத்து ஆல்ப்ஸ் தென்றலில் ஒரு பதிவு எழுத ஆரம்பித்தேன், 

சமீப வேலைப்பழு எதையும் முழுமையாக்க முடியாமல் அப்படியே அரை குறையாய் இருந்தது! உடலும் உள்ளமும் களைக்க சிந்தனைகளும் சிறைப்பட்ட நிலையில்என்ன எழுதுவது என்பதே எனக்குள் கேள்விக்குறியாய் ?

இன்று பேஸ்புக்கில் தேன் மதுரத்தமிழ் கிரேஸின் ஆணும் பெண்ணும் சரிசம நிலை எனும் உறுதி மொழி எடுப்போம் எனும் பதிவு கண்டதும் கிரேஸின் பதிவை தொடர்ந்த என் பதிலாய் இட்டவைகளை தொகுத்து பகிர்கின்றேன்!

ஆணுக்கு பெண் சரி சமமாய் வேண்டாம், ஆணைப்போல் இரத்தமும் சதையுமான சக மனுசி எனும் புரிதலுடன் மகளிர் தினமென மனமகிழ்வாய் ஒரு நாளைதெரிந்து பெண்களை மேன்மைப்படுத்துவதாய் சொல்லி பிரித்தெடுத்து வாழ்த்தும் வகையில் அனைத்துலக பெண்கள் நிலை மேம்பட்டிருக்கின்றதா?

வீட்டிலும்,சமூகத்திலும்,நாட்டிலும் மகளிருக்காக உரிமைகள் என்ன என்பதை அவள் அறிந்திருக்கின்றாளா?பெண் எனும் ஒரே காரணத்தினால் அவள் இழக்கும் வாய்ப்புக்கள்,வெற்றிகள் எத்தனை எத்தனை?உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்பது போல் அவளின் சிறகுகள் உடை படும் நிலை ஏன்?நிர்வாகத்திலும் ,பொறுமையிலும், திறனடைந்து சிறந்தோராய் இருக்கும் பெண்கள் அவள் பெண் என்பதனாலேயே அசட்டை செய்யப்படும் நிலை ஏன்? பெண்மை,மென்மை,தாய்மை என சொல்லி சொல்லி அவள் சிந்தனைகளை சிதைக்கும் சூழல் தொடர்வது ஏன்?

தாய்லாந்தில் 12 வயதில் வலுக்கட்டாயமாய் விபச்சாரத்தில் திணிக்கப்படும் சிறுமியர்கள் நாளொன்றுக்கு எட்டு முதல் பத்து ஆண்களை சுகிக்க வேண்டியவராய் இருப்பதும்,யுத்தம் நடக்கும் நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு  எதிரியை பழிவாங்கும் ஆயுதங்களாய் சோதனை எலிகளாய் பெண்கள் பயன் படுத்தப்படுவதும், ஒரு வயது சிறுமி முதல் எண்பது வயதுபாட்டி வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதும்,அடக்குமுறைகளும், அடிமைத்தனங்களும் இன்னும  பல சகிக்க இயலாத சங்கடங்களுமாய்   தொடரும் நிலை என்று மாறும்?

பெண்மையை போற்றிய இந்த நாளில் பெண்கள் படும் துயரங்கள் குறித்தும் அவர்களுக்கான விடுதலை குறித்தும் சிந்திக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கின்றோம். விண்ணுக்கும் மண்ணுக்கும் சவாலிடும் நிலையில் பெண் தன்னை உயர்த்திக்கொண்டாலும் பெண் என்பவள் போகப்பொருளே எனும் மாயை உலகிலிருந்து வெளிவரும் நாள் எப்போது!?

பெண் குழந்தைந்தையாய், குமரியாய், மனைவியாய் , மகளாய், தாயாய்  பல வேடங்கள் இட்டாலும்  திருமணத்தின் மூலம் வரும்  சுமங்கலி எனும் பட்டம் கணவன் இல்லை என்றாகும் போது அமங்கலமாகும் நிலை மறையும் நாளும் எப்போது? பூவும் பொட்டும் திருமணம் தந்தவை என்பது போல் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படும் நிலை ஏன்? சீதனமும் சீர் தூக்கலும் பெண்ணை மட்டும் அடக்குவதேன்?ஆணும் பெண்ணுமாய் ஒரே  நிலையில் ஒரே படிப்பை படித்து பட்டம் பெற்று வெளி வரும் நிலையில் ஆணுக்கான தகுதி உயர்வாயும் ,பெண்ணுக்கான தகுதியோ பட்டம் பெற்றாலும்   திருமண சந்தையில் விலை பேசு பொருளாய்  பொன்னும் பொருளுடன் பெண்ணையும்  வதைக்கும் நிலை ஏன்?

இப்போது அப்படி எல்லாம் இல்லை என குறிப்பிட்ட சூழலை மட்டும் வைத்து சுதந்திரமாய் இருப்பதாய்  நினைக்கலாம், ஆனால் எத்தனை உயர்ந்தாலும் ஒரு படி குட்டை தான் எண்ணத்தின் விதை பெண்கள் குறித்து எங்கும் உள்ளதே!

என் அனுபவத்தில் என்னை நான் நிலை நிறுத்த எனக்காக திறமைகளை வெளிப்படுத்த நிரம்ப போராட வேண்டி வந்தது எனில் அதில் மிகை இல்லை!சிறு வயதில் சைக்கிள் ஓட பழக போனால் பெண்குழந்தைக்கு எதற்கு சைக்கிள் ஓட்டம் என தடைசெய்த காலமாய் என் காலமும் இருந்தது, பாடசாலை தவிர்த்து வீட்டுக்கு வெளியே செல்லும் போது தனியே செல்லக்கூடாது எனும் கட்டுப்பாடுகள் கொண்ட காலமாகவும் இருந்தது,

என் தொழிலில் நிர்வாக ரிதியில் என்னை என் திறமையை வெளிப்படுத்த பல ஆண்டுகளை செலவிட வேண்டி இருந்தது! என் கஸ்டமர்கள் கூட ஆரம்ப நாட்களில் பல விருந்துகள் விழாக்கள் குறித்த டிஸ்கஸுக்கு நான் செல்லும் போது என்னவரும் உடன் வருவதால் எல்லாமே அவர் மேற்பார்வையில் நடப்பதாய் நினைத்து நீ பேசாமல்இரு!அவர் தானே எல்லாம் செய்யப் போகின்
றார் என சட்டென சொல்வார்கள்.  நான் அவ்விடத்தில் பிசினஸ் கருதி அமைதியாய் இருந்தாலும் விருந்தின் இறுதியில் யார் அனைத்தையும் நிர்வகித்தார் என்பதை அவர்கள் முகத்தில் அறைவது போல் நிருபித்து காட்டி இருக்கின்றேன். இறுதியில் ஐயோ மன்னித்து விடுமா நாங்கள் இப்படி நீ தான் அனைத்தும் நிர்வாகிப்பே என நினைக்கவே இல்லை என சொல்லும் படி தான் என்னை நானும் நிருபிக்க வேண்டி இருந்தது, இருக்கின்றது!

சில பெரிய பார்ட்டிகளை அரேஞ்ச் செய்யும் போது கூட்டத்தினை கட்டுப்படுத்த, அதிகமாய் குடித்து விட்டு கலாட்டா செய்பவர்களுக்கு அஞ்ச வேண்டித்தான் இருக்கின்றது. எங்கே நம் மீது தவறான புரிதல் வந்து விடுமோ என்பதற்காகவே வேலை நிர்வாகம் என வரும் போது இலகு தன்மை நீக்கி கடினமாக முகமூடியை அணிந்து கொள்ள வேண்டியும் வருகின்றது! 

ஆணின் வெற்றிக்கு பின் பெண் இருப்பது போல் பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஆண் இருப்பான் என்பதுடன் அவளை வெற்றி பெற செய்யவிடாமல் பண்ணுவதும் அதே ஆணும், பெண்ணும் தான்!

அண்மையில் ஒரு சம்பவம் படித்தேன், இந்தியாவில் கவுன்சிலராயிருக்கும் பெண்ணுக்கு தன் பணி என்ன எனவே தெரியவில்லையாம்,வீட்டில் சமைப்பதும் துவைப்பதும் தான் அவள் பணியாம், அவள் பதவியை அவள் கணவன் நிர்வகிப்பதாயும் அவளுக்கு அவளுக்காக அலுவலகம் செல்ல க்கூட அனுமதி இல்லையாம், இதே போல் பேருந்து நிலையத்தில் பூக்கட்டி விற்கும் ஒரு கவுன்சிலர் குறித்தும படித்தேன்! ஏன் இந்த நிலை? பதவிக்கும் போகத்துக்கும் பொம்மை போல் பெண்ணை நிறுத்தும் நிலை ஏன்?

உலகெங்கும் பெரும்பாலும் இதே நடை முறைதான்,வளர்ந்து வரும் நாடுகளில் தான் இந்த நிலை எனில் வளர்ந்து விட்ட நாடுகளிலும் இதே நிலை, மகப்பேறு,அதை தொடர்ந்த விடுமுறை, பராமரிப்பு,குழந்தைக்கு உடல் சுகவீனம் எனில் அவனை கவனிக்க மெடிக்கல் போட்டு வீட்டையும் குழந்தையையும் கவனிக்கவேண்டிய நிலை, ஆண்களை விட அறிவில் நிர்வாகத்தில் பலவகையில் சிறந்திருந்தாலும் ஊதியக்குறைவு, என பல வகைகளில் பெண் எனின் சற்று இறக்கமாய் இறுக்கமாய் இருக்கும் நிலை தான் எங்கும் இருக்கின்றது.

பெண்களை வேலைக்கு எடுக்கும் போது அவளுக்கான வயது, திருமணமா
னவளா?அடுத்துஎத்தனைவருடத்தில்குழந்தைபெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்
ளாள் என்பதுவும், நாற்பது வயதுக்கு மேல் எனில் அதன் பின்னரான உடல் உபாதைகளும்கருத்தில்கொள்ளப்பட்டேவேலைகளுக்கும் நியமனம் வழங்கப்
படுகின்றது.

என் வீட்டை எடுத்தால் என் பெண் வயது 15 தான் ஆகின்றது, அவள்” அப்பா எப்போதேனும் ஒருமுறை கிச்சனில் போய் ஏதேனும் சமையல் செய்தால் அப்பா பாவம், இது அம்மாவின் வேலை தானே? அப்பாவை ஏன் சமைக்க விடணும் என என்னுடன் விவாதம் செய்வாள்! பெண்ணாயிருந்தும் சமைத்தல் என்பது பெண்களுக்கானது என்பதும் உலகில் எங்கும் ஊறிப்போனதாய் இருக்கின்றது. சமைத்தல், கழுவுதல் துவைத்தல் காயப்போடுதல் எல்லாம் பெண்களுக்காக பணியாய் மட்டுமே! வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும் பிள்ளை அம்மா பசிக்குது என்பானே தவிர அப்பா பசிக்குது என சொல்வதில்லையே?

வீட்டில் இருக்கும் பெண்களுக்கும்,வேலைக்கு போகும் பெண்களுக்கும் இதே நிலை தான், எத்தனை வளர்ந்தென்ன, உயர்ந்தென்ன இப்பணிகள் அனைவ
ருக்கும் சமம் எனும் நிலையை நம் வீட்டில் நாம் உருவாக்காத வரை உலகில் எப்படிமாற்றம் வரும். ஆணைப்போல் எட்டரை மணி நேரம் வேலைக்கு சென்று அதே பணிகளை செய்து வீட்டுக்கு வந்தாலும் வீட்டில் தொடரும் வேலைகளையும் கவனிக்க வேண்டியதும் பெண்ணுக்கான சுமைகள் தானே? 

வீட்டுக்குள்ளேயே பெண் எனில் இப்படி ஆண் எனில் அப்படி என தான் வளர்க்கின்றோம். இரவு பத்து மணிக்குள் வீட்டுக்கு வராத பையனை திட்டாத நான் பெண்ணை ஆறு மணிக்கு மேல் வெளியே போகக்கூடாது என சொல்லும் போது என் மகன் என்னிடம் கேட்கின்றான். நீங்கள்.என்னை கட்டுப்படுத்துவதில்லையே? தங்கையைமட்டும்ஏன்கட்டுப்படுத்துகின்றீர்கள்?
என்னை போல் தானே அவளும் என்கின்றான்? 

இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை! இப்படி பல புரியாத புதிர்களாய் நாம் நமக்குள் இருக்கும் போது மாற்றத்தினை எங்கிருந்து எதிர்பார்க்க முடியும் என புரியவே இல்லை !

ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியுமாய் ஆணும் பெண்ணும் சரி சமம் எனும் நிலையை உருவாக்க அவளின் உடல் கூறுகளே அவளுக்கு தடையாகுமா? 

தடையாக இருப்பதும் அவள் உடல் கூறுகள் தானே? வீட்டை விட்டு புறப்படும் பெண் குழந்தை வீடு திரும்பி பத்திரமாய் வரும் வரை பெண்ணுக்கு அம்மாவாய் மனம் பதைக்கும் அதே நேரம்,, பெண் உரிமை மறுக்கும் தாயாய் நான் இருப்பதும் நிஜமாகின்றதே! பெண்ணுக்காக உரிமை பேசும் என்னால் என் பெண்ணுக்காக உரிமையை மறுக்கும் நிலை ஏன்?

ஆணுக்கு பெண் சரி நிகர் என்பது வாய்ச்சொல்லில் தான் சாத்தியமாகுமா? இனம், மொழி மதம் கடந்து பெண் எனும் அவள் பாலினமே அவளுக்கு தடையாய் அவளை சிறைப்படுத்தும் நிலையும் சிந்தனையும் என்று தான் மாறும்?பெண்ணியம் என்பதும் பெண் விடுதலை என்பதும் ஆண்களுக்கு எதிரானபோராட்டமாய்அல்ல!நமக்குள் நாமே நம்மை விடுதலையாக்கும் போராட்டமாய் நம் சிந்தனைச்சிறகுகளை சுதந்திரமாய் பறக்க விடுதலே பெண்ணியத்தின்விடுதலையாய்இருக்கின்றதுஎனில்அதில் தவறில்லை!

நம் சமூகம் மட்டும் அல்ல! உலகின் அனைத்து சமூக மக்களும் இதே நிலையில் தான்,ஆண் மக்களை கட்டுப்படுத்தாத சமூகம் அவள் உடல் கூறும் பருவமும் தரும் இயலாமையினால் பெண்மக்களை எங்கே செல்கின்றார்கள், எவருடன் செல்கின்றார்கள், எப்போது திரும்புவார்கள் என கட்டுப்படுத்தும் நிர்ப்பந்தத்தினை தருகின்றதே! இந்த கட்டுப்பாடு அவள் ஆழ் மனதில் பதிந்து எதிர்காலத்திலும் தமக்காக விதிக்கப்பட்டது இதுவே எனும் சிந்த்னையை தரும் போது எங்கிருந்து சரி சமம் எனும் உணர்வு வரும்?

தடைகள் தாண்டி சாதனைப்பெண்களாய்  தம்மை உயர்த்திகொண்ட அனைத்து மகளிரை எண்ணி பெருமிதம் அடையும் அதை நேரம், அறியாமை இருளில் மூழ்கித்தவிக்கும் பெண்களை எண்ணி மனம் கனக்கின்றது!

ஆண் பெண் பேதங்கள் எல்லா இனத்திலும் உண்டு! பெண் விடுதலை சுய உரிமை குறித்து பேசினால் பெண்ணியம் பேசுவதாய் எண்ணியும் திமிர் பிடித்தவள் எனவும் ஒதுக்கி வைக்கும் சமூகசூழலுமாய் பெண்ணுக்காக உணர்வுகள் தொடர்ந்தும் மறுதலிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றது! ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல் உரிமைகள் மறுக்கப்படுதல் ஒருபக்கம் இருக்க தமக்கான உரிமையை தவறாக பயன் படுத்தி பெண் இனத்துக்கே கேடுண்டாக்கி அவமானசின்னங்கங்கள் வடுக்களாக நிலைக்க வைக்கும் பலரும் எம்மத்தியில் இல்லாமல் இல்லை, ஆடைச்சுதந்திரம் எனும் பெயரில் அரை குறை ஆடை அணிவதும், மறைக்கப்பட வேண்டிய அங்கங்களை காட்சிப்பொருளாக்குவதும், பெண் என்றாலே போதையும் போகமும் எனும் நிலைக்கு தள்ளி பெண்மையின் மென்மையை விலை பேசுவோராய் இருப்போரும் உண்டு!

அனைத்தையும் தாண்டி தம் உரிமை என்ன என உணராத பெண்களாய் நாம் அனைவருமே இருக்கின்றோம்!இனியும் அப்படித்தான் இருக்கப்போகின்
றோமா? வருடத்தில் ஒருநாள் எமக்கெனதெரிந்து தரும் வாழ்த்துக்களையும், பரிசில்களையும், ரோஜாக்களையும் பெறுவதே எம் பெருமைஎனவும் இந்தநாளில் மீடியாக்களில் கட்டுரை எழுதுவதும், பேசுவதும் தான் எமக்காக விடுதலை, உரிமை என கூண்டுக்குள் அடைபட்ட கிளிகளாய் திருப்திப்பட்டுக் 
கொள்ளப்போகின்றோமா?கூண்டைவிட்டுபறந்து சுதந்திரமாய் சிந்திக்க 
போகின்றோமா? நமக்காக யாரும் சிந்திக்க போவதில்லை! நாம் தான் சிந்திக்க வேண்டும், சிந்தித்து விழிப்புணர்வு பெற வேண்டியவர்களாய் நாம் தான் இருக்கின்றோம்.

நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும், நமக்கான உரம் தன்னம்
பிக்கையும், தைரியமும், பொறுமையும், விடாமுயற்சியும் மட்டுமே!

சிந்திப்போம்!

நன்றி!
என் வலைப்பூவினுடாக படங்கள் இணைக்க முடியவில்லை, பாட் ரெக்வெஸ்ட், ஈரோர் 400 என கடந்த ஒரு வாரமாகவே காட்டுகின்றது! விபரம் தெரிந்தவர்கள் உதவுங்களேன்!


56 கருத்துகள்:

 1. ///ஆணும் பெண்ணும் சரிசம நிலை எனும் உறுதி மொழி எடுப்போம் ///
  இனிமே ஆண்களும் கையில் பூரிக்கட்டை தூக்கலாமோ?

  பதிலளிநீக்கு

 2. பதிவு மிக அருமை சொன்ன விஷயங்கள் சிந்திக்க வைக்கின்றன். இந்த பதிவில் நான் கண்ட குறை பதிவின் நீளம்தான். மனதில் எழுந்த எண்ணங்களை பட படவென அப்படியே கொட்டி தீர்த்துவீட்டீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொட்டி எல்லாம் தீர்க்க வில்லை, தட்டித்தான் பகிர்ந்தேன்.சிலபல அவசியமான பகிர்வுகள் நீண்டதாய் இருந்தாலும் தப்பில்லைதானே?

   நீக்கு
 3. நல்ல சிந்தனை.மா.பெண்கள் ஒற்றுமையின்றி,தெளிவான சிந்தனையின்றி,சமூக அக்கறையின்றி,தாங்கள் ஆண்களுக்கு அடிமை என்ற மனோபாவத்தில் தான் இன்னும் உள்ளனர்.பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதாகவே கருதப்படுகின்றது...சமத்துவம் வர இன்னும் எத்தனை தலைமுறை போராட வேண்டிவருமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதாமா!

   நமக்குள் நாம் தான் முதலில் தெளிவு பெற வேண்டிய நிலையில் இருக்கின்றோம்மா!

   நீக்கு
 4. சிந்திக்க வேண்டிய பல கேள்விகள்...

  பதிலளிநீக்கு
 5. மானுட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெண்தான் தலைவி. பெண்ணுக்கு கட்டுப்பட்டுதான் ஆண் நடக்கவேண்டும். இன்றைக்கும் கூட பழங்குடி இனங்களில் பெண்களின் ராஜ்யம்தான். அவள் சொல்தான் அம்பலமேறும். நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட நாகரிக வாழ்க்கைக்கும், ஆடம்பரத்துக்கும் பலியிட்டது பெண்ணை. சொத்து என்ற ஒன்றை மனிதன் சேர்க்கத் தொடங்கியப் பின்தான் தனது வாரிசில் கலப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக அதுவரை பெண்ணுக்கு இருந்த பாலியல் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி 'கற்பு' என்ற நிலைப்பாட்டை கொண்டு வந்தான். அன்றிலிருந்துதான் பெண்ணடிமைத்தனம் தொடங்கியது. இன்றும் பெண்ணை சமூகம் அதைக் கொண்டுதான் வீழ்த்துகிறது.
  சிந்திக்க வைக்கும் பதிவு!
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி செந்தில் குமார்! சில விடயங்களில் பெண்களாலேயே அவற்றை மீற முடியாமல் இருக்கின்றது அல்லவா?அதனுள் கற்பும்,தாய்மையும் அடங்கிப்போகின்றது!

   நீக்கு
 6. பெண்ணியம் என்பதும் பெண் விடுதலை என்பதும் ஆண்களுக்கு எதிரானபோராட்டமாய்அல்ல!நமக்குள் நாமே நம்மை விடுதலையாக்கும் போராட்டமாய் நம் சிந்தனைச்சிறகுகளை சுதந்திரமாய் பறக்க விடுதலே ///ஆழமான கட்டுரை..ஜொலிக்கிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாலேவரியில் நச் என்று சொல்லி இருக்கிறார்...குட் குட் குட்

   நீக்கு
  2. ஹலோ அவர்கள் உண்மைகள் சார், அது என் கட்டுரையின் சாரம்சம். நான் போல்ட் செய்திருக்கும் வரிகளை நான் ஒன்று சொல்வேன் சார் காப்பி செய்து சொல்லி இருக்கின்றார். முதலில் நீங்கள் பதிவை திரும்ப முழுமையாக படியுங்கள் புரியும்.

   நீக்கு
  3. கருத்தை ஏற்றமைக்கு நன்றி செல்வா சார்!

   நீக்கு
 7. நல்ல கருத்துமா,, ஆம் கடக்வேண்டிய தொலைவு அதிகம் தான், அதனை கடக்க தன்நம்பிக்கை தான் வேண்டும்.. நல்ல கட்டுரை,, வாழ்த்துக்கள் சகோ,

  பதிலளிநீக்கு
 8. ////வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும் பிள்ளை அம்மா பசிக்குது என்பானே தவிர அப்பா பசிக்குது என சொல்வதில்லையே ? ////

  சிந்திக்க வேண்டிய விடயமே இது ஆதி காலம் தொட்டு இருக்கின்றது இதை சட்டென மாற்றுவது இயலாத காரியம் நல்லதொரு அலசல் வாழ்த்துகள்.

  பெண்கள் நினைத்தால் இவ்வுலகில் எதையும் சாதிக்க முடியும் என்பது எனது ஆணித்தரமான கருத்து அதற்கு முதலில் பெண்கள் அனைவருக்கும் எண்ணங்களில் ஒற்றுமை வரவேண்டும் பெண்களை போதைப் பொருளாகவே சமூகம் சித்தரிக்கின்றது.

  உதாரணம் ஆணின் உள்ளாடை விளம்பரத்துக்கு பெண்ணை உபயோகப்படுத்துகின்றான் அந்தப்பெண் பொருளாதாரத்துக்காகத்தான் நடிக்கின்றாள் அதே நேரம் தங்களைப்போல் பெண்ணுரிமைபற்றிப் பேசும் சிந்தனைகள் அவர்களுக்கு வருவதில்லை இந்த விளம்பரம் பெண்ணினத்தை அவமானப்படுத்துகின்றதே என்று நினைத்துப் பார்ப்பது இல்லை கேட்டால் எனது குடும்பநிலை இப்படி என்பாள்.

  விபச்சாரத்தை சில இடங்களில் பெண்களே நடத்துகின்றார்களே இதற்கு என்ன சொல்ல முடியும் ஒரு காலத்தில் அவளும் நிச்சயமாக இந்த இழி தொழிலில் இருந்திருக்க கூடும் அப்படிப்பட்டவள் நாம்தான் இப்படி வாழ்ந்தோம் நமது பெண்ணினத்தை முடிந்த அளவு காப்போம் என்ற சிந்தை எழுவதில்லை காரணமென்ன ?

  எனது கருத்து 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆணும் பெண்ணும் சமமே.

  ஆண் தன்னை ஆண்மகன் என்று சொன்னாலும் அதை நிரூபிக்க ஒரு பெண் வேண்டும் அதேநேரம் ஒரு பெண் தன்னை மலடி இல்லை என்று நிரூபிக்க ஒரு ஆண் வேண்டும் இந்த உள்நோக்கம் எல்லா மனிதரிடத்திலும் இருந்தால் புரிந்தால் எண்ணங்களில் ஏற்றத்தாழ்வு வராது என்பது எனது தாழ்மையான கருத்து நான் இன்னும் எழுத நினைக்கின்றேன்.

  பதிவாக எழுதலாமே...... என்று விடை பெறுகின்றேன்
  சிவசக்தி நமக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்கள் நினைத்தால் உலகில் அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை தங்கள் நீண்ட அவசியமான கருத்துக்கு நன்றி சார்!

   பதிவிடுங்கள்

   நீக்கு
 9. மிக இயல்பாக எவ்வித போலிப் பூச்சுக்களுமின்றி
  விரிவாக
  அழகாக
  அழுத்தமாக
  எழுதிய பதிவு மனம் கவர்ந்தது.
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. நிஷா, உங்கள் பயம், ஆதங்கம் புரிந்தாலும் என் கருத்து மாறுபடுகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சமூகத்தில் மலிந்துகிடக்கின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால், அது ஒரு பெண்ணிற்கு விலங்காகலாமா? உங்களுக்குப் பதிலாக இட்டாலும் இங்கு நான் சொல்லும் கருத்துகள் பொதுவானவையே.
  வீட்டிற்கு நேரத்துடன் வர வேண்டும் என்று அவரவர் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்பக் கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியம். ஒரு ஆண் பத்து மணிக்கு வரலாமென்றால் பல காரணங்கள் இருக்கலாம். அவரின் படிப்பாகவோ, வேலையாகவோ இருந்தால் சரி, ஆனால் பொழுதுபோக்கிற்காக என்றால் தவறு என்பேன். இதில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொழுதுபோக்க வெளியில் செல்வது, நண்பர்களுடன் இருப்பது தவறல்ல, நம் குடும்பத்தின் கட்டுப்பாடுகளையும் கோட்பாடுகளையும் தெரிந்து பின்பற்றும்வரை. ஆனால் பொழுதுபோக்கினாலும் மகன் தாமதமாக வருவது தவறில்லை என்று கூறும் அதே வேளையில், படிப்பிற்காகவும் வேலைக்காகவும் கூட பெண் வெளியில் இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு இருப்பது தவறே! மேலும் ஒரு பெண் பொழுதுபோக்கிற்காக வெளியில் செல்வதோ நட்புகளைச் சந்திக்கச் செல்வதோ தவறில்லை என்பதையும் சொல்கிறேன்.
  ஆணோ, பெண்ணோ, நம் பிள்ளைகளுக்கு நம் குடும்ப மதிப்பீடுகள் இவையிவை, இவற்றை நீ மறக்காமல் பின்பற்றவேண்டும். தவறு செய்யும் சூழலை உணர்ந்தால் விலகிவிட வேண்டும், அதைப் பற்றித் தாயுடனோ, தந்தையுடனோ, அக்கா, அண்ணனுடனோ, வேறு நம்பிக்கையான உறவுகளுடனோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். சிலவற்றைத் தாயிடம் சொல்ல எளிதாக இருக்கும், சிலவற்றைத் தந்தையிடம் சொல்ல எளிதாக இருக்கும், இருவரிடமும் சொல்லத் தயக்கமாக இருந்தால் சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை, இப்படி யாரோ ஒரு நம்பிக்கைக்கு உரிய உறவோ நட்போ இருக்கலாம். பிள்ளைகளுடன் நட்பாகப் பழகினால் எண்ணப் பரிமாற்றம் சரியாக இருந்தால் முக்கால்வாசிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
  மீதி, சமூகத்தில் நடக்கும் கேடுகள் நம் பிள்ளையை அணுகாமல் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை தான். கடவுள் நம்பிக்கையிருந்தால் பிரார்த்தனையும். பெண்களுக்கு உடல் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் என்றாலும் ஆண்களுக்கு அது இல்லாமல் இல்லையே. ஆண்களும் உடல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் உலகிலேயே நாம் வாழ்கிறோம். ஒரு பாதிப்பு என்றால் ஆணிற்கும் பெண்ணிற்கும் ஏற்படும் மன ரீதியிலான பாதிப்பு ஒன்றே. பெண்ணுக்கு அதிகம் என்று நீங்கள் குறிப்பிடுவது கர்ப்பமாகும் அபாயத்தைத் தானே? உண்மை தான், ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக அப்பெண்ணைக் குற்றம் சாட்டுவதோ ஒதுக்குவதோ வாழ்க்கையே வீணாகிவிட்டது என்று கலங்குவதோ தேவையில்லை. கடினம் தான், ஆனால் அதைத் தான் நம் சமூகம் செய்ய வேண்டும். நேரக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக ஆபத்தை நீக்கி விடுமா என்றால் இல்லைதானே? எத்தனை எத்தனை விதமான கொடுமைகளைக் கேள்விப்படுகிறோம்? செய்திகளில் அறிகிறோம்? ஆனால் அவற்றிற்காக நம் பெண்களின் சிறகுகளை ஒடிக்க வேண்டுமா? இப்படி இப்படிப் பிரச்சினைகள் இருக்கின்றன, கவனமாக இரும்மா என்று சொல்ல வேண்டும். எதுவானாலும் என்னிடம் சொல்லும்மா, நான் இருக்கிறேன் என்று சொல்லவேண்டும். ஒருவன் கேலி செய்கிறான் என்றால் உடன் வந்து சொல்வாள். ஆனால் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்களோ என்று பயந்து சொல்லாமல் விட்டால் அதிகப் பிரச்சினைகளைச் சந்திக்கும் சூழ்நிலை வரலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தியாவில் பிறந்துவளர்ந்த நீங்கள் இத்தனை விசாலமாய் சிந்திப்பதை இட்டு மிகவும் மகிழ்கின்றேன் கிரேஸ்!

   பெண்களுக்கு விலங்காகலாமா?விலங்கிடப்பட்ட இந்த சமூகத்திலிருந்து விடுபடுதல்குறித்தது தான் என் பகிர்வு. பிள்ளை வளர்ப்பை குறித்து அல்லாமல் ஆண் பெண் சரி நிகர் உரிமை குறித்தும் அதற்காக வாய்ப்புக்குறித்துமே நான் பகிர்ந்தேன்.

   அதே நேரம் இந்த விடயத்தில் நாம் என்பது நான் அல்லது நீங்கள் மட்டும் எடுக்கும் முடிவாய் இருப்பதில்லை, நம் மனசு எத்தனை விசாலமாயிருந்தாலும் நாம் நம்மை சார்ந்திருப்போருக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் இருக்குன்றோம்.மகனோ மகளோ வீட்டு வேலை என வரும் போது நான் பாகுபாடு காட்டுவதில்லை எனினும் காரணமோ காரியமோ ஒரு பெண் தனியே இரவில் வெளியில் சென்று வரும் சூழல அத்தனை பாதுகாப்புக்குரியதால் இன்றைய சூழலில் இல்லை.ஆணுக்கும் அதே பாதிப்பு உண்டெனினும் இயல்பாயிருக்கும் ஆணின் தைரியமும் தன்னம்பிக்கையும் ஒரு பிரச்சனை என வரும் போது பெண்ணுடன் நிலைப்பதில்லை,அதே போல் பெண்ணுக்காக சுமையாக கர்ப்பம் தரித்தல் கூட அத்தனை இலகுவாய் ஒன்றுமே இல்லை என ஏற்கும் படியாய் வளந்து விட்ட நாடுகளில் கூட இல்லை,

   இளவயதில் வேண்டாத சுமையாகவும் தகப்பனில்லாத பிள்ளை எனும் அவப்பெயர் அப்பிள்ளையை தொடரும் படிதான் எங்கும் இருக்கின்றது.இந்த இடத்தில் நாம் நியாயம் பேசி ஒன்றுமே இல்லை நடக்கவில்லை என இலகுவாக எடுக்க முடியாது என்பது என் கருத்து, பெண்குழந்தைகளை தன்னம்பிக்கையோடு தைரியமாக வளர்த்து அவர்கள் சிறகுகளை உடைக்காது சுதந்திரமாய் பறக்க விடுதல் என்பது அத்தனை இலகுவானதாய் இல்லை, நாம் கொடுக்கும் சுதந்திரத்தினை சரியாக பயன் படுத்தி கொள்வோரும் மிக அரிதாய் இருக்கும் படியான ஒரு சிக்கலான சூழலில் நாம் இருக்கின்றோம் அல்லவா?

   டெல்லிபலாத்காரத்தின் பின்னரான பல செய்திகளையும் பெரிய மனிதர்களின் பேச்சுக்களையும் அறிந்திருப்பீர்கள் தானே? அந்த பெண் நள்ளிரவில் தன் நண்பனுடன் தனியே சினிமா பார்க்க வந்தது தவறென திசை திருப்பி விடும் சூழலும் பலாத்காரம் செய்தவனின் விடுதலையுமாய் வேரில் வென்னீரை ஊற்றிக்கொண்டே மரம் செழிக்கும் என எதிர்பார்ப்பத்து போலத்தான் பெண்களுக்கான சரி நிகர் உரிமை எனும் விடயமும்!

   நீக்கு
  2. நன்றி நிஷா. ஆமாம் மற்றவர்களையும் சார்ந்து வாழும் சமூகத்தில் சில விசயங்களுக்கு வளைந்து கொடுத்துப் போக வேண்டியிருக்கிறது தான். அதே நேரம் மாற்றத்திற்கான விதை தூவிக் கொண்டே இருக்க வேண்டும்.
   //நாம் நியாயம் பேசி ஒன்றுமே இல்லை நடக்கவில்லை என இலகுவாக எடுக்க முடியாது என்பது என் கருத்து, //இலகுவானது அல்லதான். ஆனால் அதை நோக்கி நகர வேண்டும் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் பல உயிர்கள் இதனால் மண்ணைவிட்டுப் பிரியும். இந்த விஷயம் மாறிவிட்டால் இவ்வகைக் குற்றங்கள் குறையலாம் என்று கூடத் தோன்றுகிறது. மிகவும் சென்சிடிவான விஷயம் தான்.
   டில்லி விஷயம் மிகவும் கொடுமையானது..தண்டனை சரியல்ல என்று பெரும்பாலோர் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை..
   அனால் இங்குதான் மக்கள் ஒன்றை உணர வேண்டும்..ஐயோ வெளியே போகாதேம்மா என்று தடுக்கும் பெற்றோர்கள் அதிகரித்தனரே அன்றி இம்மாதிரி சொல்வது குற்றம் என்று நியாயத்திற்கு எழுந்து நிற்கவில்லை. தன் குடும்பம், தன் பிள்ளை என்ற நிலையில் வரும் பயம்தான் மிகப்பெரிய தடையாக இருக்கிறது. காலம் தான் பதில் சொல்ல வேண்டுமோ?

   நீக்கு
 11. இப்படிப்பட்டக் கொடுமைகளுக்கு ஆளாகும் ஆண்களின் பாதிப்பும் மிகப்பெரியதே என்று கூறுகிறேன். ஆணானால் பாதிக்கப்பட்டால் இழப்பு பெரிதில்லை என்ற எண்ணம் தவறு. கர்ப்பம் மட்டுமே வித்தியாசம், ஆனால் மனதளவில் ஏற்படும் பாதிப்பு ஒன்றே. ஆக, ஆணோ பெண்ணோ பத்திரமாக இருக்கவேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறோம். பாதுகாப்பான சமூகம் உருவாக நம்மால் ஆனதைச் செய்யவேண்டும். பொறுப்புடன் இருக்க வேண்டும். பாதுகாப்பாய் இருப்பதற்குப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக, சமூகத்தில் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு முழு ஆதரவாக அவர்களைத் தட்டிக்கொடுத்துத் தேற்றுபவர்களாக இருக்க வேண்டும். தங்கள் மேல் தவறில்லாமல் ஒரு பிள்ளையும் புழுங்கக் கூடாது.
  உடல் சார்ந்த அபாயங்கள் மட்டும் அல்லாமல் பணம், பொருள், உடல் உறுப்பு திருட்டு என்று எத்தனை எத்தனையோ அபாயங்கள் இருபாலாருக்கும் பொதுவாக இருக்கின்றனவே. அதற்காக ஒரு ஆணையோ பெண்ணையோ பூட்டிவைப்பதுத் தீர்வாகாது.
  கட்டுப்பாடு இல்லாத, அல்லது அதிக நேரம் வெளியில் இருக்கச் சுதந்திரம் பெற்ற ஒரு ஆண், நாளை திருமணமானவுடன் தாமதமாக எப்பொழுது வேண்டுமானாலும் வருவேன், ஆண் என்பதால் தவறில்லை என்று நினைத்தால்? அப்படி நினைத்தால் அவன் மனைவியாக இருக்கும் பெண்ணிற்கு பிரச்சினை, அவளுக்குச் செய்யும் கெடுதி. உங்கள் மகன் அப்படி இருப்பார் என்று நான் சொல்லவில்லை, அதை நீங்கள் கற்றுக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். முதலில் சொல்லியிருப்பது போல உங்களுக்குப் பதிலாக இட்டாலும் இங்கு நான் சொல்லும் கருத்துகள் பொதுவானவையே.
  ஆக, சமூகக் கேடுகளைப் பற்றிய அறிவுறுத்தலுடன், குடும்பம் பற்றிய பொறுப்புகளையும் சொல்லிக்கொடுத்து ஒவ்வொரு பிள்ளையையும் வளர்த்தால் நாளைய சமூகம் இனிதாய் இருக்கும். விளக்கப்படாத நியாயமற்ற கட்டுப்பாடுகள் எதுவும் உதவாது!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதிலும் உடற்கூறு சம்பந்தமாய் உளவியல் ரிதியில் நாம் பார்த்தோமானால் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் ஒரே பிரச்சனையில் ஆண் சற்று வேகமாக மீண்டு விடுவதும், பெண் அதிலிருந்து மீள நாட்கள் எடுப்பதும் அல்லது மீள முடியாது போவதும் கூட பெண்மையின் பென்மைக்குள் புதைந்து போகின்றதே!

   பெண்ணுக்கான விலங்காய் கர்ப்பம் தரித்தலை அத்தனை இலகுவாக எடுத்து கொள்ளும் சமூகத்தில் நாம் இல்லை, புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் நாம் நமக்குள் ஒரு சமூகக்கோட்பாட்டை கட்டுப்பாட்டை வைத்து தான் வாழ்கின்றோம் எனும் போது கர்ப்பம் தரித்தலும் அதனோடான விளைவுகளும் அத்தனை இலகுவாய் நம் சமூகத்தவரால் ஜீரணிக்கும் படியாய் இல்லை.

   தாமதமாய் வீட்டுக்கு வராமல் நேரத்துக்கு வீட்டுக்கு வருவது இருவருக்கும் பொதுவே எனினும் பெரும்பாலான ஆண்கள் திருமண மாகும் முன் இரவில் நண்பர்களுடன் சுற்றி திரிந்தாலும் திருமண மான பின் தம்மை சட்டென மாற்றி கொள்பவர்களாயும் இருக்கின்றார்களே! இங்கும் பெண்மையின் மென்மையும் தாய்மையும் அவனை வீட்டை விட்டு அதிகம் செல்ல விடாமல் தடுக்கும் விலங்காயும் இருக்கின்றது. நாம் வாழும் சமூகம் சார்ந்தே நம் முடிவுகள் இருப்பதால் நம் சமூகமும் சூழலும் கூட நம் கைகளை கட்டும் விலங்காய் தான் இருக்கின்றது என்பேன்!

   பிள்ளைகளை வளர்ப்பது என்பது ஒரு குறிக்கப்பட்ட காலம் வரை தான் நம் எல்லைக்குள் அதன் பின் அந்த எல்லை விசாலமாகி அவர்களை நாம் சார்ந்திருக்கும் சூழல் வளர்த்தெடுக்கின்றது! சேற்றிலும் மலரும் செந்தாமரை என இதை சொல்வார்கள். அவர்களுக்காக சூழலை நாம் எத்தனை பாதுகாப்பாய் அமைத்து கொடுத்தாலும் அவர்கள் அதனுள் அடங்கும் வரை தான் அனைத்தும் நமக்குள் ,,,! அடங்காது போனால்..........!

   உங்கள் பேஸ்புக் பகிர்வில் என் கருத்தை பாருங்கள் ........................................
   பெண்கள் தம் மகன்களிடம் இந்த உறுதிமொழியை எடுக்காமலேயே பெண்மையை சரிசமமாய் மதிக்கும் படியாய் வளர்த்தெடுக்கும் வாய்ப்பு உண்டெனும் போது இங்கும் பெண்களாகிய நம்மில் தான் ஆண்களின் உறுதிப்படுத்தல் நிலைக்கின்றது கிரேஸ்! ஒரு பெண் தான் எதிலும் பலவீனமானவள்” அல்ல எனும் உறுதியை தன்னுள் எடுக்கும் போது சரி சம நிலை தன்னால் உருவாகும், ஆனால் நம் பெண்கள்????????

   மற்றப்படி கிரேஸ் உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன் பாடே!

   மாற்றம் தேவை தான்! அது இலகுவானதாயில்லை என்பது தான் நான் கண்ட அனுபவம்!

   பல கருத்துக்கள் என் கருத்தாய் சொன்னதெனினும் அனைத்தும் என்னை மட்டுமல்ல பொதுவாய் கண்டவைகளையும் இணைத்தே பகிர்ந்தேன்.


   நீக்கு
  2. //ஆண் சற்று வேகமாக மீண்டு விடுவதும்//அப்படி நான் நினைக்கவில்லை நிஷா.
   பேஸ்புக்கில் இக்கருத்தைப் பார்த்தேன் நிஷா. சமூக மாற்றத்திற்கு சில பெண்கள் மாற வேண்டி இருக்கிறது உண்மைதான் நிஷா. ஆமாம், மாற்றம் இலகுவானதல்ல என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அமைதியாக இருந்துவிட முடியாது. செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருக்கிறோம்/செய்வோம். வருங்காலம் இனிதாய் இருக்கட்டும்!
   ஆரோக்கியமான கருத்துப் பகிர்விற்கு நன்றி நிஷா.

   நீக்கு
  3. நிரம்ப நன்றிப்பா கிரேஸ், ஆண் சற்று வேகமாக மீண்டு விடுவது எனும் கருத்து அவர்களுக்காக பாதிப்பு பென்களோடு ஒப்பிடும் போது கர்ப்பம் அதைத்தொடர்ந்த குழந்தை எனும் சுமைகள் தொடராதனால் ஆணுக்கு இவ்வகை பாதிப்பு இல்லை என்பதனால் அவனால் மீள முடிவதை சொன்னேன்,மற்றப்படி உடல், உளவியல் பிரச்சனை என வரும் போது ஆண் பெண்ணை விட மனசொடிந்து போவது தான் நிஜம.இதை குறித்து நாம் இன்னொரு விவாதப்பதிவில் பார்க்கலாம்.

   ஒரு விடயம் சொன்னால் நம்புங்கள் கிரேஸ், உங்கள் வயதில் அதாவது நான்கைந்து வருடம் முன்னால் நானும் உங்களை போல தான் சிந்தித்தேன், எழுதினேன், எனினும் எனக்கு என் பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் நண்பன் நண்பிகள் பெற்றார்கள் என ஒவ்வொருவருடனான சொந்த அனுபவம் ஏற்பட்ட பின் என் கருத்து மாறிப்போனது.

   நாம் நம் இந்தியச்சுழலில் தான் இப்படி என நினைத்தால் இங்கே சுவிஸ் மக்களும் அதே கட்டுப்பாட்டை தான் கடைப்பிடிக்கின்றார்கள் என் காணும் போது நம் கட்டுப்பாடு ஒன்றுமே இல்லை என்றாகின்றது.

   நீக்கு
 12. மனதில் தோன்றியதை அப்படியே சொன்ன விதம் அருமை ! வெளிப்படையாக விலாவாரியாக எழுதிய கருத்துகளை வரவேற்கிறேன் ..நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் சார்! தங்கள் கருத்துக்கு நன்றி!

   நீக்கு
 13. நீளமான பதிவு என்றாலும் மனம் திறந்த பதிவு. அருமை. அதற்குச் சமமாக கிரேஸ் பின்னூட்டத்தில் வெளுத்துக் கட்டியுள்ளார். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. நிஷா உங்கள் பதிவு அருமை. தைரியமான கருத்துகள். அதே சமயம் சில கருத்துகள் சிந்திக்க வைத்தன சிறிது மாறுபடுவதால்....

  மாறுபட்ட கருத்துகளைச் சொல்ல நினைத்துத் தட்டச்ச நினைத்த போது க்ரேசின் பெரிய பின்னூட்டங்கள் கண்டேன். அதில் அனைத்தும் வந்துவிட்டன எனவே மீண்டும் சொல்லவில்லை.

  நிஷா க்ரேஸ் இருவருக்கும் வாழ்த்துகள். அருமையான பதிவும் பின்னூட்டமும்..

  பதிலளிநீக்கு
 15. நிஷா உங்கள் பதிவு அருமை. தைரியமான கருத்துகள். அதே சமயம் சில கருத்துகள் சிந்திக்க வைத்தன சிறிது மாறுபடுவதால்....

  மாறுபட்ட கருத்துகளைச் சொல்ல நினைத்துத் தட்டச்ச நினைத்த போது க்ரேசின் பெரிய பின்னூட்டங்கள் கண்டேன். அதில் அனைத்தும் வந்துவிட்டன எனவே மீண்டும் சொல்லவில்லை.

  நிஷா க்ரேஸ் இருவருக்கும் வாழ்த்துகள். அருமையான பதிவும் பின்னூட்டமும்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்களையும் பகிருங்களேன்! என்னை கேட்டால் பிள்ளைகளை வளர்ப்பது என்பது அத்தனை எளிதானதாய் இல்லை, நாம் எத்தனை தான் நல்ல பழக்க வழக்கங்களை சிறு வயது முதல் கற்பித்தாலும் அதன் செயலாக்கம் நாம் வாழும் சூழலையும் பொறுத்தே அமைகின்றது! வளர்ப்பில் ஆணுக்கு பெண் பேதம் பார்க்காமல் போனாலும் பெண் என வரும் போது அரசனும் ஆண்டியும் ஒரேவித கட்டுப்பாடுகளை தான் விதிக்கின்றான். கௌரவம், மானம் மரியாத என பல காரணங்கள் பெண்ணை இன்னும் அடக்கிக்கொண்டே தான் செல்கின்றது.

   கவனியுங்கள்... இதை எழுதும் நான் 26 வருடம் சுவிஸ் நாட்டில் வசிக்கின்றேன், 16 வயது முதல் இங்கு வசிக்கும் நான் சுவிஸ் பெண்களுக்குரிய சிந்தனைகள் கொண்டு சிந்தித்தாலும் பெண்ணுக்காக கட்டுப்பாடுங்கள் இங்கும் எங்கும் ஒன்று போல் கண்ட அனுபவம் தான் மேலே என் பதிவை எழுதிட தூண்டியது. அதில் சிறு துளியாய் என் சொந்த அனுபவம் இருக்கின்றதே தவிர செயலளவில் எனக்கான சிந்தனையும் சுதந்திரமும் வேறுபட்டதே!

   நீக்கு
 16. Equality should not be only on the paper. It should be in people's minds. Otherwise 33℅ or even 50℅ doesn't mean anything.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை! எதையும் எழுத்தில் எழுதுவது இலகு! அதை செயல்படுத்தும் போது தான் அதற்குரிய கஷ்ட நஷ்டங்கள் புரியும். பெண்களுக்காக உரிமை விடயத்திலும் எல்லாம் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றது!அதை தான் நானும் சொல்கின்றேன். இதிலிருந்து விடுபட்டு விசாலமாய் சிந்திக்கும் நாள் எப்போது?

   நம்மில் பொரும்பாலானவர்கள் கானல் நீரை கண்டு ம்யங்கி அதுவே நிஜம் என ஏற்கின்றோம்.ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் அனுபவம் மிகப்பெரிய ஆசான்!

   நீக்கு
  2. நீங்கள் பேஸ்புக் ஆவி சாரா? நான் யாரோ புதியவர் என நினைத்தேன்பா!வருகைக்கும் பதிவுக்கும் நன்றி !

   நீக்கு
 17. ஆரோக்கியமான விவாதம். கிரேஸ் & நிஷா இருவருக்கும் மதுரைத்தமிழனின் ராயல் சல்யூட்

  பதிலளிநீக்கு
 18. அருமையான பதிவு அக்கா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்தையும் பகிர்ந்திருக்கலாம் அபி!

   நீக்கு
 19. நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும், நமக்கான உரம் தன்னம்
  பிக்கையும், தைரியமும், பொறுமையும், விடாமுயற்சியும் மட்டுமே!

  உண்மைதான் அக்கா...

  பெண் முன்னேற்றத்திற்கான தடை ஆண்கள் மட்டும் அல்ல.... பெண்கள்தான்... முதலில் தங்களது அறியாமையில் இருந்து விடுபட்டு வெளிவர வேண்டும்...

  நிஷா அக்கா மற்றும் சகோதரி கிரேசின் விவாதங்கள் (ரொம்ப ஆரோக்கியமானது) நிறைய பேசியிருக்கின்றன...

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே அதே தான் குமார்! நான் சொல்ல வருவதும் அதே தான்!பெண்கள் முதலில் தம் சிந்தனைகளை விசாலமாக்கி வெளி வர வேண்டும்.

   என் கட்டுரை பிள்ளை வளர்ப்பை பற்றியதாயிராமல் ஆண் பெண் சமத்துவம் குறித்தே பேசுகின்றது. புரிதலுக்கு நன்றி!

   நீக்கு
 20. //தமக்கான உரிமையை தவறாக பயன் படுத்தி பெண் இனத்துக்கே கேடுண்டாக்கி அவமானசின்னங்கங்கள் வடுக்களாக நிலைக்க வைக்கும் பலரும் எம்மத்தியில் இல்லாமல் இல்லை//இதேதான் இதைதான் நானும் சொல்கிறேன் நிறைய பெண்கள் பெண்ணியம் women's lib என்ற பெயரில் எதற்கு போராடுகிறோம் என்ற புரிதல் இல்லாமலேயே பெண்ணியம் பேசறாங்க .சில அவமான சின்னங்களால் மற்ற அனைவருக்குமே கேவலம்தான் .எனக்கு இந்த மகளிர் தினம்லாம் கொண்டாடுவதில் உடன்பாடேயில்லை எல்லாநாளும் எமக்கான நாள் எதற்கு ஒரேயொரு நாளை சுட்டி கொண்டாடனும் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே அதே தான் நானும் கேட்கின்றேன். பெண்ணியம் என சொல்லி பெண்ணென்றால் திமிர் பிடித்தவர்கள், தான் தோன்றிகள் எனும் நிலையில் நடப்போரும் உண்டு, வீட்டை கவனிக்காமல் நாட்டை கவனிப்பது தான் பெண்ணியம் என்போரும் உண்டு.எனக்கும் மகளிர் தினம் என கொண்டாடுவதில் உடன் பாடில்லைமா!

   நீக்கு
 21. எங்க வீட்ல இந்த சமையல் விஷயத்தில் என் மகள் என் பக்கமே .ஒரே பெண் என்பதால் தைரியமாக பேசகூடியவளாகவே வளர்த்துவிட்டோம் ..இதில் வேடிக்கை என்னவென்றால் என்னிடம் கூட சொல்லமாட்ட நிறைய இரகசியங்களை அப்பாவிடம் கூறுவாள் .நேரக்கட்டுப்பாடு இதுவரை விதிக்கவில்லை அவளுக்கு ஆனால் இங்கேபள்ளிகளிலேயே பாதிக்கபட்ட சிலர் ஒரு மணிநேரம் பிள்ளைகள் முன்பு வந்து பேசுவார்கள் ..அவர்களில் ட்ராக் அடிக்ட்ஸ் /ரேப் விக்டிம்ஸ் என பலருமுண்டு .,,பிள்ளை வளர்ப்பு என்பது வெளிநாட்டில் கத்தி மேல் பயணம் தான்இந்தியர்களுக்கு ..அளவுக்குஅதிகமா சுதந்திரமும் கேடுதான் .ஆணோ பெண்ணோ எது சரி எது தவறு என்று ஆராய்ந்து அறியும் பக்குவம் இருந்தால் நல்லது ..

  பதிலளிநீக்கு
 22. வணக்கம்
  பதிவை படித்த போது சிந்திக்கவைத்தது. நல்ல கேள்விகளை கேட்டுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 23. இது மகளிர் தினப் பதிவு அல்ல
  மகளிர் ஆதங்கப் பதிவு.....
  சற்று நீளமாக பதிவு இருந்தாலும்
  பெண்களின் மனநிலை குறித்து
  புரிந்து கொண்டேன் தோழி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகளிர் தினம் கொண்டாடும் படி மகளிர் நிலை உள்ளதா என்பதனாலேயே அத்தலைப்பிட்டேன், கருத்துக்கு நன்றி!

   நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!