அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!
சோதனைகள் நேரம் சோர்ந்திடாதீர்கள்
வாதைகள் கண்டு பயந்திடாதீர்கள்!
தோல்விகள் கண்டு துவண்டு விடாதீர்கள்!
வாதைகள் கண்டு பயந்திடாதீர்கள்!
தோல்விகள் கண்டு துவண்டு விடாதீர்கள்!
சாதனைகளே தொடந்து வந்திட்டால்
வாழ்க்கை என்றுமே வரமாகாது!
வாழ்க்கைப்பாதையில் பயணம் செய்திட
துள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்
எள்ளல் வார்த்தையை எரிக்க தெரியணும்
எள்ளல் வார்த்தையை எரிக்க தெரியணும்
வல்லவனே நீ செல்லுமிடமறிந்திடாவிட்டால்
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!
வெற்றி எனும் ஏணிப்படியில்
தோல்வி என்பது வேகத்தடை தானே!
சோதனை நேரம் கலங்கி நின்றிட்டால்
சோதனை நேரம் கலங்கி நின்றிட்டால்
சாதனை உன்னை கிட்டிச்சேராதே!
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!
சோதனை நேரம் ஒடுங்கி இருக்காமல்
வேதனைகளை தாண்டி சென்றிட்டால்
வாழ்க்கை என்பதும் வரமாகுமே!
மனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்!
சோதனை நேரம் ஒடுங்கி இருக்காமல்
வேதனைகளை தாண்டி சென்றிட்டால்
வாழ்க்கை என்பதும் வரமாகுமே!
மனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்!
ஆரம்பமே அட்வைஸாக இருக்கின்றதே என என்னை திட்டாமல் பதிவை முழுமையாக படியுங்கள், பதிவின் இறுதி பகுதியில் இதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்,
அன்பானவர்களே! பிரச்சனைகளை கண்டு ஓடி ஒளியாதீர்கள், எனக்கு மட்டும் தானே என உங்கள் நிலையில் மட்டும் பிரச்சனைகளின் சவால்கள் நேரம் சிந்திக்காமல் உங்களை காட்டிலும் கோடானும் கோடி மக்கள் உங்களுக்கு கிடைத்த வரம் இன்றி தவிக்கின்றார்கள் என உணர்ந்திடுங்கள். நமக்குக்கீழே உள்ளவர் கோடி என நினைத்து பார்த்து நிம்மதி தேடுங்கள்!
உங்களிடமிருப்பதை உணராமல் இல்லாததை தேடி ஓடாதீர்கள். கடவுள் நம்மிடமிருந்து ஒன்றை எடுத்தால் இன்னும் பலதை நமக்குள் மறைத்து வைத்திருப்பான் என புரிந்து மறைவாயிருப்பதை தேடி வெளிக்கொண்டு வந்து உங்களை நிலை நிறுத்துங்கள்.
நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சவால் உண்டு. நமக்கெனும் இலக்கு உண்டு, பிறந்தோம்,வளர்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல் நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாய் எதை விட்டு செல்ல போகின்றோம் என யோசிப்போம்.
நிர்வாணியாய் வந்தோம், அதே நிர்வாணியாய் போவோம் எனும் நிலையில் கொண்டு வந்ததும் இல்லை , எடுத்து செல்லப்போவதுமில்லை என்பதை உணர்ந்து இப்பூமியின் பொக்கிஷ்ங்களும், வீடுவாசல்களும், நகை நட்டுக்களும், கற்கும் கல்விகளும் கூட நம்முடன் வராது எனும் போது நம்மிடம் இல்லாததை குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்.
நாம் சாதிக்கப்பிறந்தவர்கள் அன்பானவர்களே! சோதனைகள் தொடர்வதில்லை என உணர்ந்து சாதனையாளர்களாகுங்கள்.தயக்கங்கள் தடைகளை சுட்டுப்பொசுக்கி தைரியமாய் தன்னம்பிக்கையோடு வெளி வாருங்கள்.! உங்களால் முடியும்!
இன்னாளில் கவலைகள் மறையட்டும், கண்ணீர்கள் நீங்கட்டும், அன்பும் ஆரோக்கியமும் உங்களுக்குள் பொங்கட்டும்!
ஏற்கனவே ஐந்தாறு வயதில் கோயில் குளத்தில் குளிக்கும் போது பின்னந்தலை அடி பட விழுந்திருக்கின்றேன். அதன் பின் மீண்டும் பதிமூன்றாம் வயதிலும் விழுந்ததனால் மரணித்து போயிருக்க வேண்டிய என்னை மரணத்தின் பிடியிலிருந்து காத்து. என்னை சாதனையாளராக்கிய இறைவனுக்கும் நற்பழக்கவழக்கங்களை கற்பித்து அன்பு செய்யவும் அரவணக்கவும் கற்பித்த என் பெற்றாருக்கும், அறிவில்சிறந்து விளங்க காரணமான ஆசிரியர்களுக்கும், உன்னால் முடியும் என சொல்லி என்னை ஊக்குவிக்கும் என் அன்பு கணவருக்கும், சோர்ந்து விழும் போதெல்லாம் தனக்கேற்ற படி.. என்னம்மா ஆச்சு கவலைப்படாதேம்மா ஜீசஸ் கிட்ட எல்லாம் சொல்லம்மா! அவர் எல்லாமே தீர்த்து வைப்பார் என சொல்லும் என் அன்பு செல்வங்கள் கப்ரியேல், எப்சிக்கும்.......
எனக்கே எனக்குள் மறைந்திருந்த திறமைகளை வெளிகொணர செய்துஎன்னை ஈவன்ஸ் மனேஜ்மெண்டில் ஈடுபடுத்தி பின்னாலிருந்து வழி நடத்திய முத்தமிழ் மன்ற சுதாகர் அண்ணாவுக்கும். தொடர்ந்து வழி நடத்தி வரும் அன்பு சுரேஷ் எனப்படும் பரஞ்சோதி அண்ணாவுக்கும்.. இற்றளவில் எனக்கொண்றென்றால் பதறித்துடித்து அன்னையாய் அரவணைக்கும்அன்பு செல்லத்தும்பி கட்டாரில்’இருக்கும் முஸம்மிலுக்கும் என் பதிவுகள் மூலம் நன்றி செலுத்துகின்றேன்.
இந்த வலைப்பூவை நான் தொடங்க என் இன்னொரு பரிமாணத்தினை வெளிப்படுத்த ஊக்க சக்தியாய் இருந்த மனசு குமாருக்கும், வலைப்பூ வடிவமைத்து தந்த அன்பு நண்பன் சேனைத்தமிழ் உலா சம்ஸுக்கும் என் நன்றிகள்!
இன்றில்லாவிடில் என்றேனும் நன்றி சொல்ல வாய்ப்புக்கிடைக்குமா எனும் நிலையில்லாத வாழ்க்கையை நாம் வாழ்வதனால் இப்பதிவில் நன்றி சொல்லி விட மனம் விளைகின்றது.
விபத்தின் தொடர்ச்சியாய் விளைவுகள் வினையாய் என்னை சுழட்டி அடித்தாலும் வாழ்ந்து தான் பார்க்கலாம் எனும் வைராக்கியத்தோடு இற்றை வரை என் தன்னம்பிக்கையை தளர விடாது காத்துவர முடிவது இறைவன் அருளே!
மனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்!
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!
உங்களின் மனஉறுதிக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஇனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்...
நன்றி தனபாலன் சார்!
நீக்குதங்களின் மனஉறுதி போல் ஆயுளும் நிலைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநேரமின்மையும் தொடர் பணியும்தான் வலைப்பதிவு பக்கம் வரமுடியாமைக்கு காரணம். பின்னூட்டம்தான் இடவில்லையே தவிர அனைத்து பதிவுகளையும் மொபைலில் வாசித்துவிடுவேன்.
த ம 1
நன்றி செல்வகுமார். இயலும் போது வாருங்கள்.
நீக்குநிஷா..வாழ்க்கை எத்துனை தான் புரட்டினாலும் அன்பானவர்களின் துணையால் மீள்வோம். பொங்கல் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநிச்சயம் மீளலாம். நன்றி.
நீக்குமனதிலுறுதி மேலும் தெடர வாழ்த்தும் அன்பு., நரேந்திரன்,
பதிலளிநீக்குநிச்சயம் சார். நன்றி.
நீக்குதங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! நண்பரே....
பதிலளிநீக்குஉங்களுக்கும் உரித்தாகட்டும்.
நீக்குஎதை இழப்பினும் தன்னம்பிக்கை இழக்க கூடாது! அது தங்களிடம் நிறைய இருப்பதை தங்களின் பதிவுகளே சொல்கின்றன! அது தங்களை எப்போதும் காக்கும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்களுக்கும் இனிய நல் வாழ்த்துகள் .
நீக்குதன்னம்பிக்கை ஊட்டக்கூடிய அருமையான கவிதை வரிகள் நன்று
பதிலளிநீக்குவாழ்வில் எதிர் நீச்சல் போட்டே பழக்கப்பட்ட தாங்களுக்கு இனி எல்லாம் நலமாகும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுடன்.
காணொளிகள் நன்று
நன்றி சார்
நீக்குதமிழர் திருநாள் வாழ்த்துக்களை
பதிலளிநீக்குமகிழ்வோடு நவில்கின்றேன்
கனிவோடு ஏற்றருள்வீர்
உங்களுக்கும் நல் வாழ்த்துகள் ஐயா
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குதடைகள் வரும்போது தலைவன் துணை நிப்பான்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிஜம். நன்றிப்பா உங்களுக்கும் வாழ்த்துகள்
நீக்குஅக்கா நீங்கள் கடந்து வந்த பாதையை சுருக்கமாக நீங்கள் தந்தாலும் அந்த சிறிய கட்டுரையில் பல ஆண்டுகளைக் கடந்துள்ளீர்கள் அதில் நீங்கள் பட்ட இன்னல்கள் சங்கடங்கள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் தாங்கி பொறுமையாக என்னாலும் முடியும் என்று நீங்கள் சாதித்துக் காட்டிய உயரம் இப்போது எங்களால் அன்னாந்து பார்க்க முடிகிறது மிக்க மகிழ்சியாக உள்ளது
பதிலளிநீக்குஉங்கள் மன தைரியம் தன்னம்பிக்கை உங்களை ஊக்கப்படுத்திய உங்கள் உறவுகள் குடும்பம் நண்பர்கள் அனைவருக்கும் இந்த நேரம் நானும் எனது சார்பாகவும் சேனைத் தமிழ் உலா சார்பாகவும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் முயற்சிகள் உங்களுடையதாய் இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு உரமூட்டிய உங்கள் உறவுகளுக்கு மீண்டும் நன்றி
சோதனைகள் நேரம் சோர்ந்திடாதீர்கள்
வாதைகள் கண்டு பயந்திடாதீர்கள்!
தோல்விகள் கண்டு துவண்டு விடாதீர்கள்!
சாதனைகளே தொடந்து வந்திட்டால்
வாழ்க்கை என்றுமே வரமாகாது!
வாழ்க்கைப்பாதையில் பயணம் செய்திட
துள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்
எள்ளல் வார்த்தையை எரிக்க தெரியணும்
வல்லவனே நீ செல்லுமிடமறிந்திடாவிட்டால்
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!
வெற்றி எனும் ஏணிப்படியில்
தோல்வி என்பது வேகத்தடை தானே!
சோதனை நேரம் கலங்கி நின்றிட்டால்
சாதனை உன்னை கிட்டிச்சேராதே!
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!
சோதனை நேரம் ஒடுங்கி இருக்காமல்
வேதனைகளை தாண்டி சென்றிட்டால்
வாழ்க்கை என்பதும் வரமாகுமே
இந்த அனைத்தையும் நான் மீண்டும் மீண்டும் படித்துப்பார்க்கிறேன் என் அண்ணனுக்கு இந்த வரிகளை காப்பி எடுத்து அனுப்பவுள்ளேன் தோல்வியில் சோந்து போகும் என் அண்ணனுக்கு இந்த வரிகள் மிகவும் பயனுள்ளதாய் அமையும்
அருமையான பாடல்களுடன் அற்புதமாக தன்னம்பிக்கை வரிகளை சுமந்து வந்த இந்தப் பாதை எனக்குப் பிடித்திருக்கிறது
பெரிய லைக் போட்டுள்ளேன் தொடருங்கள் அக்கா
அம்மாடி, ரெம்ப நன்றிப்பா. நீங்கள் தானே என் பக்க துணை. அப்புறம் என்ன?
நீக்குஓ!!ரொம்ப மன வலிமை உங்களுக்கு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
ம்ம் நன்றிப்பா.
நீக்குதடைகளைத் வாழ்க்கை.. உங்கள் மனவுறுதி தொடரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்கு2016 தைப்பொங்கல் நாளில்
பதிலளிநீக்குகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
முதல் வருகை. நன்றி சார். உங்களுக்கும் வாழ்த்துகள்
நீக்குநிஷா முதலில் உங்கள் மன உறுதிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்த்குஅள் பாராட்டுகள்! தங்களுக்கான பிரார்த்தனைகளுடன் எங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!!
பதிலளிநீக்குநன்றி துளசி சார். உங்களுக்கும் எமது நல் வாழ்த்துகள்
நீக்குஅன்பின் அக்கா...
பதிலளிநீக்குகட்டுரை வலி தந்தது என்றாலும் அந்த வலியைக் கடக்கும் மனதைரியம் வேண்டும் என்பதையும் சொன்னது.
எனக்கு இணையம் கொடுத்த இணையற்ற நட்புக்களில் அக்காவாய் மலர்ந்தவர் நீங்கள். எனக்கு உங்களை சேனை வந்த பிறகுதான் தெரியும்... ஆனால் அதற்கு முன்னே என் எழுத்துக்களை தாங்கள் வாசீத்தீர்கள் என்பதை சேனை அறிமுகத்தில் நீங்க மனசு சே.குமாரா...? உங்களை நான் தொடர்ந்து வாசிக்கிறேன் என்ற வார்த்தைகளின் மூலமாகத்தான் என்னை தாங்கள் சில ஆண்டுகளாக தொடர்கிறீர்கள் என்று அறிந்தேன்
உங்களின் எழுத்துக்கள் சிறகில்லாப் பறவை... அதற்கு வானமே எல்லை என்பதை உணர்ந்துதான் வலைப்பூ ஆரம்பியுங்கள் என்று ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நடத்தி பிஸியாக இருக்கும் உங்களை நச்சரித்தோம்... அதில் வெற்றியும் கண்டோம்... இதற்கெல்லாம் நன்றி எதற்கு...?
உங்களின் வலிசார்ந்த வாழ்க்கையை நானும் அறிந்தவன் என்பதால் உங்கள் தன்னம்பிக்கை குறித்து வியப்படைவேன்... எத்தனை வலி என்றாலும் அதையும் சுகமாய் மாற்றி எங்களை... எங்களின் எழுத்துக்களை வாசித்து தட்டிக் கொடுத்து சுட்டிக்காட்டி மெருகேற்றும் தீபம் நீங்கள்.
உங்கள் வழிகாட்டுதலே எங்களுக்கு பலவிதத்தில் உதவியிருக்கிறது. என் அண்ணன் (மூத்த அண்ணன்) அவரின் திருமணத்துக்கு முன் லாரி ஆக்ஸிடெண்டில் தூக்கி வீசப்பட்டு தலை முழுவதும் தையல் போடப்பட்டது... அதன் பிறகு சிங்கப்பூர் போய் கன்ஸ்ட்ரக்சன் வேலையில் 7 வது மாடியில் இருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக 5 வது மாடியில் கட்டைதட்டி உள்ளே விழுந்து கால் முறிவோடு பிழைத்துக் கொண்டவர்... இரண்டு வருடங்களுக்கு முன்னர் மைன்ஸில் வேலை பார்ப்பவர்களுக்கு தனது வண்டியில் நின்றபடி வேலை சொல்லிக் கொண்டிருக்கும் போது மேட்டில் நின்ற லாரி எப்படியோ இறங்கி வந்து வண்டியைத் தள்ளி வண்டியின் மீது ஏறி இவரின் இடது தொடையில் ஏறி நின்றது. பிழைப்பாரா.. மாட்டாரா என தவிப்பில் நாங்கள் எல்லாம் இறைவனிடம் வேண்டி, அழுது புலம்பி மீண்டும் எழுந்து வந்தார். இன்று அதே வேலைதான் பார்க்கிறார்... அவரிடமும் இருந்தது தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கை மிகுந்த ஒருவரால் எத்தனை பிரச்சினை என்றாலும் சாதிக்க முடியும்... அந்த தன்னம்பிக்கை உங்களிடம் நிறைய இருக்கிறது. நீங்கள் சாதிப்பீர்கள்... கண்டிப்பாக வலிகளை மறக்கும் சாதனைகளைச் செய்வீர்கள்...
எனக்கு இப்போதைய பிரச்சினைகளில் பிடி எழ விடாமல் பிடித்து வைத்திருப்பதை தாங்கள் அறிவீர்கள்... எப்பவும் கவலைப்படாதேப்பா... என்று சொல்லி என்னைத் தேற்றுவீர்கள்... உங்கள் நல்ல மனதுக்கு எதுவும் வராது அக்கா...
எல்லாம் சுகமே... இனி எல்லாம் உங்கள் வளர்ச்சியின் வாசல்களே....
அக்கா சும்மா அடித்து ஆடுங்கள்... வலி எல்லாம் போய் வசந்தம் விளையாடட்டும்.
அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடொயோவ் ... குமார். எம்மாம் பெரிய பின்னூட்டம். நிரம்ப நிரம்ப நிரம்ப நன்றி..! எல்லாம் நீங்கள் கூடி தரும் வரம் அல்லவோ? என்னை சுற்றி அன்பெனும் வளையம் இருக்க. வலிகளும் வேதனைகளும் ஓடிப்போகுமே!
நீக்குஆசிர்வதிக்கப்பட்டவரே..,உடலின் வலிகளா உம்மை மழுங்கச்செய்யும்...?
பதிலளிநீக்குசெய்யும் வேலையில் திறம்படும் அழகு..ஆல்ப்ஸ் மலை உச்சி தொடும் உங்கள் சாதனை அளவு..
விபத்துகளில் நீங்கள் முடங்கிவிடவில்லை..எழுத்துகளில் முடுக்கிவிட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்.
மலையகம் தந்த இரவுப்பூவே..
தமிழகம் மட்டுமல்ல..தமிழுலகம் யாவும் புகழ்பெற இன்னும் எழுதுங்கள்..
ரெம்ப நன்றி செல்வா சார், அபப்டியே ஆகட்டும் தங்கள் வருகையும் தொடரட்டும்.
நீக்குபெண்களின் சக்தி மிக பெரியது....அவள் சக்தி உரு...சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி படிக்கட்டில் தொடர்ந்து செல்ல மனதார வாழ்த்தும் ஜேகே எனும் நண்பன்.......
பதிலளிநீக்கு